பெரம்பலூர் எம்.எல்.ஏவைத் தொடர்ந்து அறந்தாங்கி எம்.எல்.ஏவுக்கும் கொரோனா

பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரேனா தொற்று பாதிப்பு சமீப நாட்களாக அதிகரித்து…

பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரேனா தொற்று பாதிப்பு சமீப நாட்களாக அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது ஒமிக்ரான் தொற்றும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகின்றது.

இந்த சூழலில் பெரம்பலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் எம்.எல்.ஏவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரின் கார் ஓட்டுநருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து தற்போது அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கதில்,

“கொரோனா பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப் படி லேசான (Mild) அறிகுறி என்பதால் வீட்டிலேயே என்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளேன். எனவே அண்மையில் என்னோடு அருகிலும், தொடர்பிலும் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.