முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா நிலவரம்; சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது

தமிழ்நாட்டில் இன்று 23,459 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,68,500 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 20,911 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 23,459 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 28,91,959ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6,235 பேர் குணமடைந்த நிலையில் இன்று 9,026 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 27,36,986 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 1,18,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 36,956 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 8,963 பேருக்கும் செங்கல்பட்டில் 2,504 பேருக்கும் கோவையில் 1,564 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

இனி மின்சார சைக்கிளில் 100 கி. மீ வரை பயணம் செய்யலாம்!

Nandhakumar

திமுக அரசின் மெத்தனமே சென்னையில் பாதிப்புக்கு காரணம்: பழனிசாமி

Ezhilarasan

மக்களைப் பற்றிக் கவலைப்படுபவன் நான்: ஸ்டாலின் பேச்சு

Halley Karthik