புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் மால்களில் 50 சதவிகித நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பேருந்துகளில் 50 சதவிகித பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
உணவகங்கள், ஆடிட்டோரியம், பியூட்டி பார்லர், சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சி கூடம் ஆகியவற்றிலும் 50 சதவிகித நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக உணவகங்களில் உள்ள மேஜைகளில் இரு இருக்கைகள் மட்டும் போடப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








