நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை…

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாய் சேகர் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தொற்று மரபணு மாற்றம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில் வடிவேலுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும், நடிகர் வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது.

இதனால், அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.