நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 லட்சத்து 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக இரண்டு லட்சத்து 82 ஆயிரத்து 970 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#Covid19Update | ➤ஏறத்தாழ 248 நாட்களுக்கு பின்னர் 2.8 லட்சத்தைக் கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு
➤புதிய பாதிப்பு-2,82,970
➤உயிரிழப்பு-441
➤குணமடைந்தோர்-1,88,157
➤சிகிச்சையில்-18,31,000
➤ஒமிக்ரான்-8,961https://t.co/WciCN2SQmv | #Covid19ThirdWave | #Covid19Vaccination— News7 Tamil (@news7tamil) January 19, 2022
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 441 பேர் ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை நேற்றுடன் ஒப்பிடுகையில் 44 ஆயிரம் பேர் கூடுதலாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.