கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில மாதங்களாக, அதிகரித்து வரும் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்றுவரை 97,845 ஆக இருந்த நிலையில், தற்போது 1,00,546 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 793 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், போதிய படுக்கை வசதி இன்றி, ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சைபெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement: