இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 666 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரு கோடியே 7 லட்சத்து ஆயிரத்து 193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில், 11 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுக்கு சிகிச்சைபெற்றுவந்த மேலும் 123 பேர் உயிரிழந்ததால், இதுவரை பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 847ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், புதிதாக, 14 ஆயிரத்து 301 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 3 லட்சத்து 73 ஆயிரத்து 740ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 23 லட்சத்து 55 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







