உயிரை பணயம் வைத்து இளைஞரை காப்பாற்றிய காவலர்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயில் முன் பாய சென்ற இளைஞரை தக்க சமயத்தில் காவலர் ஒருவர் காப்பாற்றும் சிசிடிவி வீடியோ வைரல் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள வித்தல்வாடி ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சியான…

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயில் முன் பாய சென்ற இளைஞரை தக்க சமயத்தில் காவலர் ஒருவர் காப்பாற்றும் சிசிடிவி வீடியோ வைரல்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள வித்தல்வாடி ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. 18 வயதான இளைஞர் ஒருவர், ரயில் வருவதற்கு சில நொடிகளுக்கு முன் நடைமேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். ரயில் நெருங்கி கொண்டிருக்கும்போது திடீரென தண்டவாளத்தில் குதித்தார். இதை கவனித்த காவலர், தக்க சமயத்தில் அந்த இளைஞரை ரயில் தண்டவாளத்தின் மறுபக்கத்திற்கு தள்ளி அவர் உயிரை காப்பாற்றினார்.

இதனையடுத்து தண்டவாளத்திலிருந்து அவர்கள் நகர்ந்த ஒரு சில வினாடிகளில் அதிவேக ரயில் கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை அதிகம் பகிர்ந்து வரும் இணையவாசிகள், அந்த காவலரின் துணிச்சலான செயலை பாராட்டும் வகையில், லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். “அந்த காவலர்தான் நிஜ ஹீரோ. அவரை நான் தலை வணங்குகிறேன்” என இதுபோன்று மக்களின் ஆதரவுகளை அந்த காவலர் பெற்றுவருகிறார்.

இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, காவலருக்கு பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.