வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. கொரோனா பரவல், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம்…

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொருட்களின் விலை உய்ரந்து கொண்டே வருகிறது. ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆனால் இந்த நெருக்கடி நிலையிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் எரிபொருள் மீதான வரியை சற்று குறைத்தன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வின்றி, தாழ்வின்றி அப்படியே காணப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.25 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வரும் இந்நேரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ஏற்றி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.