இன்றைய ஐபில் தொடரில் பெங்களுரு அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி 226 ரன்கள் குவிந்துள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 24வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் ருதுராஜ் கெய்வாட், டெவான் கான்வே ஜோடி களமிறங்கினர். இதில் ருதுராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் மறுபுறம் இருந்த டெவான் கான்வே பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். டெவான் 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 37 ரன்களும், சிவம் துபே 52 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் குவித்தது. இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களுரு அணி விளையாடி வருகிறது.







