வடகிழக்குப் பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மழைநீர் வடிகால் கட்டுமான பணி – வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி போன்றவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து துறைகளும் இணைந்து, செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.