32 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற தொடர் நடவடிக்கை – வேளாண்துறை அமைச்சர் தகவல்…..!

தமிழ் நாட்டி உள்ள 32 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக இடைக்கால பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து பேசினார்.

அவர் பேசியதாவது, தக்காளி, மா , பலா, மிளகாய், சிறுதானியங்கள் போன்ற தேங்காய், விளைபொருள்களை மதிப்புக்கூட்டி உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் விற்பனை செய்ய ஏதுவாக, 10 கோடி ரூபாய் வரையிலான புதிய திட்டங்களுக்கு 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை என ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு 50 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் எண்ணெய்க்கான சந்தை ஊக்குவிக்கும் மையம், வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவர் ஆலோசனை மையங்கள், சிறுதானியங்கள், மிளகு பதப்படுத்தும் நிலையங்கள், தென்னை மதிப்புக் கூட்டும் மையம், வாழை ஏல மையம், மஞ்சள் மதிப்புக்கூட்டும் மையம், ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம் போன்ற வசதிகள் மொத்தம் ரூ.134 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து மாநிலத்தின் தனித்துவமான ஆண்டுகளில், விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 41 விளைபொருள்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இதில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரை ஆகிய 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது, மீதமுள்ள 32 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வேளாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் ஐந்து வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 3,065 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 101 புதிய பயிர் ரகங்கள், 21 வேளாண் நுட்பங்கள், 16 புதிய பண்ணைக் கருவிகள் நமது உழவர் பெருமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

வேளாண் கல்வியின் தரம் பெருமளவு உயர்த்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

விவசாயிகளுக்கான சேவைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், விவசாயி பதிவு (Farmer Registry) திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணுடன் விவசாயிகளின் நில விவரங்களை இணைத்து 33 இலட்சம் பிரத்யேக விவசாயி அடையாள எண்கள் (Farmer ID) உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், 24 முக்கிய சேவைகளுடன் ‘உழவர்’ கைபேசி செயலி செயல்படுத்தப்படுகிறது. இதுவரை சுமார் 20 லட்சம் விவசாயிகள் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து அரசு சேவைகளைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.