உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் -டிஜிபி சங்கர் ஜிவால்

உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவது தொடர்பாக மதுரை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை உயர்…

உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவது தொடர்பாக மதுரை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.

இதில், பணியின்போது காவல்துறையினர் மன அழுத்தமின்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என டிஜிபி தெரிவித்தார். குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் எனவும்,பொதுமக்கள் – காவல்துறை இடையே நட்புறவை பேணிக்காப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் டிஜிபி சங்கர் ஜிவால் குறிப்பிட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க், மதுரை மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.