ரயிலை கவிழ்க்க சதி – ஆறு பேர் கைது..!

கோவையில் ரயிலை கவிழ்த்த சதி செய்ததாக ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்துள்ளது.

கோயம்புத்தூரில்  இருகூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்து ரயிலை கவிழ்த்த சதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுல் கிருஷ்ணன், சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வேதவன் ஆகிய ஆறு பேர் ரயில்வே காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணி மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.