சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில்,  சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமதிற்க்கு பா.ஜ.க அரசு துணை போவதாகவும், கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்தும்  ,சிலிண்டர்க்கு மாலை…

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில்,  சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி குழுமதிற்க்கு பா.ஜ.க அரசு துணை போவதாகவும், கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்தும்  ,சிலிண்டர்க்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து அழும் போராட்டம் நடைபெற்றது.

மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கரோலின் அண்ணாதுரை தலைமையில் போராட்டம்
நடைபெற்றது. மேலும், கண்டன ஆர்பாட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக, மாநில
காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர், கே.ஐ மணிரத்னம் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

— கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.