ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம்!

சென்னை போரூர் அருகே ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் கட்சி…

சென்னை போரூர் அருகே ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர்.

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும்
முன்னாள் கட்சி தலைவருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேச ஒற்றுமை என்ற பெயரில் பயணம் மேற்கொண்டார். சுமார் 136 நாட்கள் 4081 கிலோமீட்டர் அவர் மேற்கொண்ட பயணத்தின் ஒராண்டு நிறைவு நாளை முன்னிட்டு  தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், மகளிர் அணியினர் இளைஞர் அணி உள்ளிட்டோர் கையில் பதாகைகள் மற்றும் கொடியுடன் பேரணி சென்றனர்.

மேலும் போரூர் முதல் காரம்பாக்கம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற இந்த பேரணியில் ராகுல் காந்தி ஆதரவாக முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.