“ஏதோ கெட்டது நடக்கப்போகுதுனு தோணுது” – மரணத்தை முன்பே கணித்தாரா மாரிமுத்து? வைரலாகும் சீரியல் காட்சி!

நடிகர் மாரிமுத்து சீரியலில் நடித்த காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.           தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்…

நடிகர் மாரிமுத்து சீரியலில் நடித்த காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.          

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின.

இப்படியிருக்கையில் தான், இன்று மாரடைப்பால் காலமானார். இவரின் இந்த இறப்பு செய்தி சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒட்டு மொத்த திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் சீரியலில் நடித்த காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியில், காரில் செல்லும் போது தன் தம்பியிடம், வலி வந்து அழுத்துது, அப்பப்போ வருது, அது உடம்புல வர்ற வலியா இல்ல மனசுல வர்ற வலியானு தெரியலப்பா. அப்பப்ப வலி வந்து எனக்கு எச்சரிக்கை பண்ணுதுனு தோணுது.

எதோ கெட்டது நடக்கப்போகுதுனு தோணுதுப்பா எனக்கு. அதான் நெஞ்சுவலி மாதிரி வந்து எனக்கு காட்டுது. அது மணி அடிச்சு என்ன எச்சரிக்கை பண்ணுதுடா” என அதில் பேசி இருக்கிறார்.

அவர் சொன்னது போலவே, இன்று காலை அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருப்பது, சீரியலில் அவர் பேசியதும், உண்மையில் நடந்துவிட்டதே என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.