ஒருநாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வரும் 14ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் திருவிழா வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். ஒருநாள் பயணமாக தமிழகம் வரும் ராகுல்காந்தி, மதுரை செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல்காந்தி நேரில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. ராகுல்காந்தி தமிழகம் வரும் அதே நாளில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஒரே நாளில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் வருவது, தேர்தல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.







