முக்கியச் செய்திகள் விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோகித் ஷர்மா மற்றும் டி காக் தொடக்க வீரர்களக களமிறங்கினர். இதில் டி காக் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ், கேப்டன் ரோகித்துடன் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து களமிறங்கிய மும்பை வீரர்கள் சீரான இடைவெளியுடன் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணாவும், ஷுப்மான் கில்லும் களமிறங்கி மும்பை அணியின் பந்து வீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில், கில் 33 ரன்னில் அவுட்டானார். அவரையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 ரன்னிலும், மார்கன் 7 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார்.

கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் மும்பை அணி வீரர்களின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Advertisement:
SHARE

Related posts

திருப்பதி பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

Saravana Kumar

“ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன்”; முதலமைச்சர் உறுதி

Halley karthi

சென்னை மெட்ரோ ரயில் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Halley karthi