எல்லைப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்களை எழுப்ப காங். திட்டம்

எல்லைப் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

எல்லைப் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சோனியா காந்தி, எல்லைப் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறிய அவர், 12 பேருடன் காங்கிரஸ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். போராட்டத்தின்போது உயிரிழந்த 700 பேரை கௌரவப்படுத்தாது, விவசாயிகள் மீது மத்திய அரசின் உணர்வற்ற தன்மையை காட்டுகிறது என சாடினார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என சோனியா காந்தி அறிவுறுத்தினார்.

எதிர்வரும் 2022ம் ஆண்டில் கோவா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் அல்லாத ஓர் அணியை கட்டமைக் திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருகிறது.

இந்த சூழலில், சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.