குன்னூரில் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியின்போது விபத்து சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

தீயணைப்பு, காவல் துறையினர், மருத்துவக்குழு ,ராணுவ அதிகாரிகள் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளனர்.
இந்த எம்.ஐ வகை ராணுவ ஹெலிக்காப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் என 14 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளதையடுத்து இந்த தகவலை விமானப் படை அதிகாரப்பூர்வ உறுதி செய்துள்ளது.

இந்த விபத்தில் 2 உடல்கள் 80% தீக்காயங்களோடு மீட்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் 9 பேர் இருந்ததாகவும். அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.







