நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள ஸ்லிம் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவில், 90- களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, இப்போது ரஜினி காந்துடன் ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், இப்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். அந்தக் கட்சியின் சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
When hard work yields results, the happiness cannot be explained. ❤❤ pic.twitter.com/x68fEjFBTg
— KhushbuSundar (@khushsundar) August 21, 2021
சினிமா, டிவி, அரசியல் என கலக்கி வரும் நடிகை குஷ்பு, சமூக வலைதளங்களிலும் ஆக்டி வாக இருப்பவர். இவர், கடந்த சில மாதங்களாக தனது உடல் எடையைக் குறைக்கக் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், உடல் எடையை குறைத்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படங் கள் சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகின்றன. இந்தப் புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, கடின உழைப்பு அதற்கான விடையைத் தரும்போது, அந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
பல நெட்டிசன்ஸ், ’நம்பவே முடியலை, பழைய குஷ்புவா மாறிட்டீங்க’என்று கூறியுள்ளனர்.