மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அறிவிப்பில், வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அறிவிப்பில், வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் முதலமைச்சர் அறிந்துகொள்ளும் வகையில் மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ஒசூர்: ‘ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வரும் குரங்கு’

3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில், சட்டம் ஒழுங்கு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு மட்டும் மாநாடு நடத்தப்பட்ட நிலையில் தற்போது வனத்துறை அலுவலர்களையும் இணைத்து மாநாடு நடைபெறவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறையினர் மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.