ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் நாற்று நடவு தொடக்கம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .   சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள…

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .

 

சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா
தலங்களை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி
மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்
நீலகிரிக்கு வருகை புரிந்து இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது
வழக்கம்.

குறிப்பாக நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க
தோட்டக்கலைத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில்
ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி
மற்றும் கோடை திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். உதகை அரசு தாவரவியல்
பூங்காவில் மூன்று நாட்கள் முதல் 5 நாட்கள் வரை நடைப்பெறும் மலர் கண்காட்சியை
காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பெருந் தொற்று காரணமாக மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழாக்கள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் கோடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை அரசு தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மற்றும் 35 ஆயிரம் தொட்டிகளிலும்மலர் நாற்று நடவு செய்யும் பணிகள் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது.இதனால் பூங்கா ஊழியர்கள் மலர் நாற்றுகள் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மலர் செடிகளை கொண்டு பாதுகாத்தும், தொட்டிகளுக்கு நீர் பயிற்சியும் மலர் நாற்றுகளை பாதுகாத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.