முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு – ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்!

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் பற்றி பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரங்கராஜ நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச்…

Conditional bail granted to Rangaraja Narasimhan for defaming the Chief Minister and Sriperumbudur devotees!

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் பற்றி பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரங்கராஜ நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் கிரைம் போலீசார், டிசம்பர் 15ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் பெண் வழக்கறிஞர் குறித்து அவதூறாக விமர்சித்ததாக, திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகக் கூறி, அவரது மகன் முகுந்தன் ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது கைதை சட்டவிரோதமானது என அறிவித்து, அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இதேபோல, பெண் வழக்கறிஞரை விமர்சித்த வழக்கிலும் ஜாமினில் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த்து. இந்த இரு மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நடைபெற்றது. மனுதாரர் தரப்பில், முறையான நோட்டீஸ் கொடுக்கவில்லை என்றும், கைது நடவடிக்கையின்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி உரிய விதிமுறைகள் பின்பற்றவில்லை என வாதிட்டார். மற்ற வழக்குகளிலும் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். சிறையில் சாப்பிடவில்லை எனவும் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் எனவும் வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், உரிய சட்ட விதிகளை பின்பற்றிதான் கைது நடவடிக்கை மேற்கொண்டதாகவும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும், ஜாமினில் விடுவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். உரிய மனு அளித்தால் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் எனவும் வாதிட்டார். மேலும் அவதூறாக பேசிய வீடியோ காட்சிகளையும் நீதிபதி முன்பு சமர்பித்தார்.

இதையடுத்து ரங்கராஜ நரசிம்மன் பேசிய வீடியோக்களை நீதிபதி பார்வையிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ரங்கராஜ நரசிம்மனை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள், மடாதிபதிகள் பற்றி பேசக் கூடாது, சாட்சிகளை மிரட்டக் கூடாது, தொடர்பு கொள்ள கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.