முக்கியச் செய்திகள் தமிழகம்

புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

இரண்டாவது நாளாக புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் சாலையில் உள்ள புரபஷனல் கூரியர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புரபஷனல் கூரியர் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில்   சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

நேற்று காலை 11. 00 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக முறையான வருமான வரி செலுத்தி உள்ளார்களா எனவும், வரி செலுத்தி இருந்தால் செலுத்தப்பட்ட முறையான ஆவணங்கள் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.

இரண்டாவது நாளான சோதனையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புரபஷனல் கூரியர் அலுவலகத்தில் எட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நான்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் முறையான வருமான வரி செலுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புரபஷனல் கூரியர் மூலம் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை பொருட்கள் எடுத்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முழுவதும் சென்னையில் உள்ள கிண்டி, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை போன்ற இடங்களின் உள்ளபுரபஷனல் கொரியர் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏன்? – ஜி.கே.வாசன் கேள்வி

Arivazhagan Chinnasamy

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

Gayathri Venkatesan

என்னை ராணுவத்திற்கு அழைத்தாலும் வர தயார்-உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி

Web Editor