போலி நகைகளை விற்பனை செய்ததாக ஜி.ஆர்.டி. நகைக்கடை மீது புகார்

தங்க நெக்லஸ்க்கு உள்ளே கண்ணாடி துண்டுகளை வைத்து போலி நகைகளை விற்பனை செய்ததாக ஜி.ஆர்.டி நகைக்கடை மீது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர்…

தங்க நெக்லஸ்க்கு உள்ளே கண்ணாடி துண்டுகளை வைத்து போலி நகைகளை விற்பனை செய்ததாக ஜி.ஆர்.டி நகைக்கடை மீது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் கடந்த 2015ம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி நகைக் கடையில் 5 சவரன் தங்க நெக்லஸ் வாங்கியுள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் அவரது நெக்லஸ் அறுந்துவிட அதை எடுத்துக்கொண்டு பெங்களூரு சிட்டியில் உள்ள ஜி.ஆர்.டி நகைக் கடைக்குச் சென்று நகையை மாற்றித் தருமாறு கூறியுள்ளார். நகையை பரிசோதனை செய்த நகைக்கடை மேலாளர், நகையின் உள்ளே அதிக அளவில் கண்ணாடி துகள்கள் இருப்பதாகவும் அதனால் தங்களால் மாற்ற முடியாது எனவும் தாங்கள் வாங்கிய நகை கடையிலேயே மாற்றிக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னை வந்த விஜயலட்சுமி, தி.நகர் ஜி.ஆர்.டி நகை கடைக்குச் சென்று முறையிட்ட போது அவர்கள் அலட்சியமான முறையில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விஜயலசுமி தி.நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.