சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, ஒரு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருகை.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் 4,500 பேரை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த 4,500 துணை ராணுவ வீரர்களும் படிப்படியாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வந்து சேர உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முதல் கட்டமாக 15 சி.ஆர்.பி.எப். துணை ராணுவ வீரர்கள் கோவையில் இருந்து அவர்களது வாகனம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். இன்று 92 துணை ராணுவ வீரர்கள் மங்களூரில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்காக செல்ல உள்ளனர். அடுத்த கட்டமாக வரும் 27 ஆம் தேதி மணிப்பூரில் இருந்து துணை ராணுவ வீரர்கள் ஒரு ரயில் முழுவதுமாக வருகின்றனர்.