முக்கியச் செய்திகள் விளையாட்டு

காமன்வெல்த்; பதக்கத்தை உறுதி செய்த பவினா பட்டேல்

காமன்வெல்த் போட்டியில் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில் 8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர்.

பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் சூ பெய்லியை இன்று எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பவினா பட்டேல் 11-6, 11-6, 11-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் அதிகரித்த காற்று மாசு

Halley Karthik

பிஎம் கேர் நிதி; வெள்ளை அறிக்கை வெளியிட திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்

Halley Karthik

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜா

Gayathri Venkatesan