காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ்; பவினா பட்டேல் அரையிறுதிக்கு முன்னேற்றம்

காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த…

காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.

காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்கள் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில் 7-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் தனது 3-வது குரூப் 1 ஒற்றையர் ஆட்டத்தில் இன்று விளையாடினார். பிஜியை சேர்ந்த அகானிசி லாடுவுடன் மோதிய பவினா பட்டேல் 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.