காமன்வெல்த் போட்டி : நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் இரண்டாவது வெள்ளிப் பதக்கம்!

காமன்கவெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

2026 காமன்கவெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்து வருகின்றன. இதில் நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இது அவர் தொடர்ச்சியாக வெல்லும் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் ஆகும்.

இந்த போட்டியின் தொடக்கத்தில் 8.09 மீட்டர் தூரம் தாண்டிய ஸ்ரீசங்கர், முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் நீடித்தார். ஆனால் 4வது சுற்றில் ஜமைக்காவின் முன்னாள் உலக சாம்பியன் தாஜே கெயில் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார். ஸ்ரீசங்கர் 8.09 மீட்டருடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கன்சி8.08 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் சத்யநாதன் 7.97 மீட்டர் தாண்டி 5வது இடத்தைப் பிடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.