வியட்நாம்: சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 14 பேர் மாயம்!

வியட்நாமில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானதில் 14 பேர் மாயமாகியுள்ளனர்.

வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கடந்த 24ம் தேதி தென் சீன கடல் பகுதியில் சென்றுள்ளது. அந்த சரக்கு கப்பலில் 62 மாலுமிகள் பயணித்துள்ளனர். இந்த நிலையில், சரக்கு கப்பல் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த போது திடீரென மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து, கப்பலில் இருந்த மாலுமிகள் உதவிகோரி அவசர அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் முதற்கட்டமாக 44 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். பின்னர், நடைபெற்ற தொடர் மீட்புப்பணியில் மேலும் 4 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதன் மூலம் உயிருடன் மீட்கப்பட்ட மாலுமிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், சரக்கு கப்பல் மூழ்கி 5 நாட்கள் ஆகும் நிலையில் கடலில் மூழ்கி மாயமான எஞ்சிய 14 மாலுமிகளின் விவரம் வெளியாகவில்லை. மேலும் மாயமான 14 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.