பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 367 பள்ளிகளில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ஏற்கனவே தங்கிப் பயிலும் மாணவியரின் எண்ணிக்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில், இடவசதியைக் கருத்தில் கொண்டு கல்லூரி பயிலும் மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் சொல்லப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘இலங்கையிலிருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே?’
கல்லூரி மாணவியருக்கு அனுமதி வழங்குவதால் ஆகும் கூடுதல் செலவினத்துக்கு ரூ.48.36 லட்சம் நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளி்யிட்டுள்ளது. இதனால், மாணவர்கள் தடையின்றி தங்கிப் படிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.








