வசூல் வேட்டையில் #GOAT | வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறாது. நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமானது செப்டம்பர் 5 ஆம் தேதி…

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறாது.

நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமானது செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தயாரிப்பு தரப்பு கோட் திரைப்படம்4 நாட்களில் 288 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்தது. 

இந்த நிலையில் படத்தின் தற்போது வசூல் நிலவரங்களை பார்க்கலாம். பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்களை வெளியிடும் sancik தளம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், படம் வெளியான 6ம் நாளான நேற்றைய தினம் கோட்திரைப்படம் தமிழகத்தில் 9.6 கோடி ரூபாயும், ஹிந்தியில் 0.8 கோடி ரூபாயும், தெலுங்கில் 0.7 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது.

மொத்தமாக பார்க்கும் போது, தமிழகத்தில் 6 நாட்களில் 143.7 கோடி ரூபாயும், தெலுங்கில் 9.15 கோடி ரூபாயும், ஹிந்தியில் 10 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. ஆக, இந்தியாவில் கோட் திரைப்படம் 178.25 கோடி ரூபாயும், ஓவர்சீஸ் மார்க்கெட்டில் 125 கோடி ரூபாயும், மொத்தமாக 303.25 கோடிரூபாயை கோட் திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.