கோப்ரா திரைப்படம் வெளியான நிலையில், சென்னை ரோகினி திரையரங்கில் நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தனர்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாகவும், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, கனிஹா, மிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்பத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இந்நிலையில், இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 25-ம் தேதி கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, சென்னையில் உள்ள ரோகினி திரையரங்களில் நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தனர். இவர்களுடன் நடிகை ஸ்ரீநிதி செட்டி மற்றும் விக்ரமின் மகன் துரு விக்ரம் ஆகியோரும் சென்று கோப்ரா படத்தை பார்த்தனர். முன்னதாக நடிகர் விக்ரம் ஆட்டோவில் ரோகினி திரையரங்கம் சென்றார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
– இரா.நம்பிராஜன்