முக்கியச் செய்திகள் தமிழகம்

தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

தருமபுரி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொள் கிறார். இதன் தொடக்கமாக, தருமபுரி அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மையம் மற்றும் திசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதனையடுத்து பல்வேறு துறைகளின் சார்பில் 17 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். முன்னதாக தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் வழியில் உள்ள தனியார் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளி மாணவிகளை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார். பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரி யர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Advertisement:
SHARE

Related posts

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய் உயிரிழப்புகள்

Halley karthi

செங்கோட்டை-சென்னை சிலம்பு ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம்

Gayathri Venkatesan

காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி

Saravana Kumar