முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேட்டறிகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டது. அதன்பின், மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் அம்மாத 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்தார். அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறையத்தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஊரடங்கு குறித்து இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆளுநருக்கு கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் ? – சிபிஎம் கேள்வி

EZHILARASAN D

அதிமுக ஆட்சியில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட புள்ளி விவரத்தை வெளியிட தயாரா? – ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

Dinesh A

இந்தியன் சூப்பர் லீக்: பெங்கால் அணியை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்

EZHILARASAN D