முக்கியச் செய்திகள் தமிழகம்

சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் – அமைச்சர் கே.என்.நேரு

சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

பாதாள சாக்கடைத்திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளின் நிலை என்ன என்பது குறித்து மாநகராட்சி ஆணையர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கே.என். நேரு இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனிமேல் குளங்களின் கரைகளை பலப்படுத்தும்போது மண் கரையாகவே இருக்கும் என கூறினார்.

மேலும் துறை ரீதியாக அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் மழைநீர் தேங்காமல் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு, சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் துரைமுருகன்

Vandhana

அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரூ.1 லட்சம் பரிசு!

அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

Jeba Arul Robinson