மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவக் கல்வி சேர்க்கையில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







