முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் தொடக்கம் – 4 மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

’கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 784 கோடிக்கு பள்ளிகள் உள்கட்டமைப்பு கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் பின் மாலை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று புதிய திட்டமான “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை தொடக்கி வைத்து நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்த வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐந்தாம் தளத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்

அதாவது வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலர் இறையன்பு அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் வேலு அமைச்சர் பொன்முடி அமைச்சர் காந்தி உள்ளிட்ட 150-க்கு மேற்பட்ட அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றவரும்  இந்த ஆய்வு கூட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பஞ்சாப் தேர்தல்; 65 இடங்களில் பாஜக போட்டி

Halley Karthik

அதிமுக தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு?

G SaravanaKumar

அமெரிக்காவில் இரு விருதுகளை குவித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்

Web Editor