முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா Instagram News

சென்னை விமான நிலையத்தில் திறக்கப்பட்ட திரையரங்கம்; காத்திருக்கும் பயணிகளின் பொழுது போக்கிற்காக ஏற்பாடு

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுது போக்கிற்காக 250 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள், 5 திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், கார்பார்க்கிங் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இதில் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிற்த்தகூடிய கார்பார்க்கிங் கட்டிடம் பயண்பாடிற்கு கொண்டுவரப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் விமானத்திற்கு காத்து இருக்கும் பயணிகள், விமானத்தில் சென்னை வந்து மாற்று விமானத்திற்கு அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகள் பொழுது போக்கிற்காக 5 திரைகள் கொண்ட PVR திரையரங்கம் இன்று பயண்பாடிற்கு திறக்கப்பட்டது. இதனை நடிகர் சதீஷ், ஆனந்தராஜ், கூல் சுரேஷ், இயக்குநர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மேலும் நடன நிகழ்ச்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்படு காட்சிப்படுத்தப்பட்டன. சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் புதிதாகக் கட்டப்பட இணைப்பு பாலம் வழியாகத் இந்த திரையரங்கை அடையலாம். ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் 1000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம். மேலும் கூடிய விரைவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு விடுதிகள், சில்லறைக் கடைகள்  திறக்கப்பட உள்ளன.

இதனால் விமானநிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு பொழுது போக்கிற்கு பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாகச் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுது போக்கிற்காகத் திரையரங்கம் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உக்ரைன் போர்: வறுமையை சந்திக்கப்போகும் 90% மக்கள் – ஐநா எச்சரிக்கை

Janani

ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்

G SaravanaKumar

‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தில் கதநாயகனாக நடிக்கும் பிரேம்ஜி!

Vandhana