குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக சிறப்பு அதிகாரி அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் சேனல், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கள ஆய்வு செய்து வருகிறது. நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை மக்களிடம் கேட்டு வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு அதிகாரி அமுதா ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார். கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் கூறியதாவது:
‘இது, கடைமடை பகுதி என்பதால், பல்வேறு பகுதிகளில் ஏரிகளில் இருந்த தண்ணீர் வடிந்து வருகிறது. கடந்த வருடம் இந்தப் பகுதியில் 8 அடி அளவில் தண்ணீர் இருந்தது. இப்போது குறைந்திருக்கிறது. இதற்கு நிரந்தரவு தீர்வு காண என்ன செய்யலாம் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தண்ணீர் விரைவில் வடிய என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யுமாறு கூறியிருக்கிறார். அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறோம்’ என்றார்.