165 நாட்களுக்குப் பின் MBBS, BDS மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கின. ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் மட்டும் அமரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. பள்ளிகளை விரைவில் தொடங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் MBBS, BDS மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 165 நாட்களுக்குப் பின் நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
நர்சிங் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு Negative முடிவு வருவோருக்கு மட்டுமே அனுமதி என்றும் ஒரு வகுப்பறைக்குள் 30 மாணவர்கள் மட்டுமே அமரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதி அறையில் ஒரு மாணவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







