இன்று வெளியாகிறது பத்து மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – எங்கு பார்க்கலாம்?

பத்து மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து…

பத்து மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இதேபோன்று ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்படவுள்ளது. 10-ம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கும். பிளஸ்-1 முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகவுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை  ( www.tnresults.nic.inwww.dge.tn.gov.in ) அறிவிக்கப்பட்டுள்ள
இணையதளமுகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.