‘லால் சலாம்’ படத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ‘கபில்தேவ்’ – நடிகர் ‘ரஜினிகாந்த்’ வெல்கம் ட்வீட்!

லால் சலாம் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இணைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின்…

லால் சலாம் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இணைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து 2015- ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார். பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு ‘ஓ சாத்தி சால்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக போவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி, அதற்கான படப் பூஜை நடைபெற்ற நிலையில், லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லால் சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இது குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “34 நாட்கள் நடைபெற்ற  முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என குறிப்பிட்டு புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டார். மேலும் இந்த 34 நாட்களும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று” எனவும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் லால் சலாம் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் “மொய்தீன் பாய்” என வெளியிட்டுள்ளது. இது குறித்து லைகா வெளியிட்டுள்ள போஸ்டரில் “மொய்தீன் பாயின் ஆட்டம் ஆரம்பம்” என்றும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று ம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லால் சலாம் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இணைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய கபில்தேவ் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.