RCB vs SRH: 63 பந்துகளில் சதம் அடித்து அசத்திய கோலி; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு…

ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

187 ரன்களை இலக்காக கொண்டு, பெங்களுரூ அணியில் கேப்டன் டூ பிளஸ்சிஸ் – விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்தனர். கோலி 63 பந்துகளில் சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்து
பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் பிளேஆப் சுற்று வாய்ப்பை பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.