காஷ்மீரில் ராணுவம் – பயங்கரவாதிகள் இடையே மோதல்!

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராணுவத்திற்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதில்  இராணுவத்தினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புப்படையினரும் பதிலடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே பயங்கரவாதிகளை அழிக்க கூடுதல் படைகள் விரைந்துள்ளதாகவும், தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.