தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஊட்டியில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி யுள்ளன
கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மலைகளின் அரசியான உதையில், தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது.

பழமை வாய்ந்த பிரிக்ஸ் பள்ளியில் நடைபெற்ற படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், இயக்கு நர் மற்றும் பணியாளர்கள் என 90 பேர் கலந்து கொண்டனர். ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அளித்த பிறகே அவர்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அன்னி மஞ்சி சாகானாமுனே என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், குடும்பம் மற்றும் நண்பர்கள் கதையை மையமாகக் கொண்டதாக படத்தின் இயக்குநர் நந்தினி தெரிவித் தார். இந்த படத்தில் புதுமுக நடிகர் சந்தோஷ் சோபன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமிழில் குக்கூ திரைபடத்தில் நடித்த நடிகை மாளவிகா நாயர் நடிக்கிறார்.







