“ஆண் காதலன் தேவை”: நியூயார்க் பெண்ணின் விளம்பரம் ட்விட்டரில் வைரல்!

நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர், “ஆண் காதலன் தேவை” என வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டேட்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் சாதாரண நிகழ்வாக மாறி வருகிறது. பொதுவாக டேட்டிங்…

நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர், “ஆண் காதலன் தேவை” என வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேட்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் சாதாரண நிகழ்வாக மாறி வருகிறது. பொதுவாக டேட்டிங் என்பது குறிப்பிட்ட தேதி மற்றும் பொது இடத்தில் ஒருவர் தனக்கு ஏற்ற துணையை தானே பொருத்தம் பார்த்து தேர்வு செய்வதற்கான ஒரு விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் டேட்டிங்கிற்கான வரைமுறை பல்வேறு நாடுகளுக்கு இடையே சிற்சில வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.

அந்த வகையில் நியூயார்க்கை சேர்ந்த திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், கிரெய்க்ஸ்லிஸ்ட் என்ற அமெரிக்க நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பக்கத்தில் “ஆண் காதலன் தேவை” என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கிரெய்க்ஸ்லிஸ்ட் என்பது வேலை, வீடு தேடுவோருக்கான விளம்பர இணையதளமாகும்.

இந்த இணையதள பக்கத்தில், அவர் வெள்ளியிட்டுள்ள அந்த பதிவில், ஹூஸ்டனின் புறநகர்ப் பகுதியான TX, Angleton இல் எனக்கு ஒரு அழகான, விசாலமான 5-படுக்கையறை வீடு உள்ளது. என்னுடன் வாழ்வதற்கு ஒரு ஆண் காதலன் அல்லது roommate அதாவது அறைத்தோழன் வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசம். குற்றப் பின்னணி எதுவும் இருக்கக் கூடாது. பூனைகளை நேசிக்க வேண்டும்.

நான் ஒரு தடகள வீரர் என்பதால் பார்ப்பதற்கு மிகவும் மோசமாகத் தோன்றவில்லை. என் எடையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் நல்ல நிறமாக இருப்பேன். எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றுவிட்டேன். எனக்கு 13 மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் அவரது தந்தையுடன் உள்ளனர். தற்போது நான் தனிமையில் இருக்கிறேன். விவாகரத்திற்கு பிறகு யாரையும் சந்திக்க வில்லை. மேலும், எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இத்தாலிய, இஸ்ரேலிய அல்லது யூத ரத்தம் உள்ளவர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கப்பட்டேன் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் நான் கிறிஸ்த்தவ ஆண் நண்பரோ அல்லது காதலரோ தேவை என நினைக்கிறேன் என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

ஜூலை 6 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.

 

https://twitter.com/timeforjaya/status/1688392972600041473?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.