தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா பதவியேற்பு…!

தமிழ் நாடு சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா பதவியேற்றுள்ளார்.

தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்,முதலமைச்சர் விஜயின் தனிச்செயலளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செந்தில்குமார், லட்சுமிபிரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா பதவியேற்றுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் முன்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர், கருப்பையாவிற்கு பதவி பிராமணம் செய்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.